சிலை திருட்டு வழக்கில் - கைதானவரின் வீட்டிலிருந்து மேலும் ஒரு ஐம்பொன் சிலை மீட்பு :

By செய்திப்பிரிவு

மேல்மருவத்தூர் அருகே சிலை திருட்டு வழக்கில் கைதானவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மேலும் ஒரு ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சித்தாமூர் சந்திப்பில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 17-ம் தேதி நடத்திய சோதனையில், ஐம்பொன் சிலை கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த கார்த்தி(29) என்பவர் பிடிபட்டார்.

அவரிடம் நடத்திய விசார ணையின் அடிப்படையில், கார்த்திக்குடன் சிலை கடத்தலில் ஈடுபட்டு அப்பகுதியில் பதுங்கி யிருந்த சென்னையைச் சேர்ந்த மூர்த்தி(33), திருத்துறைப்பூண்டி யைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி(25), சித்தாமூரைச் சேர்ந்த குமரன்(30), அசோக்(33), அறிவரசு(43), வேலூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான்(24) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின்படி, மீனாட்சி அம்மன், ரிஷப தேவர் ஆகிய 2 ஐம்பொன் சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், திருத்துறைப் பூண்டி சுந்தரமூர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரூ.3 லட்சத்துக்கு விற்பதற்காக அவரது வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 185 கிராம் எடை, 8 செ.மீ உயரம் கொண்ட கிருஷ்ணர் ஐம்பொன் சிலையை போலீஸார் நேற்று கைப்பற்றினர். இந்த சிலையை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் இன்று(அக்.25) ஒப்படைக்க உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்