மூதாட்டியை தாக்கி நகையை பறித்த வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது :

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ முதல் தெருவில் தனியாக வசித்து வந்தவர் மாரியம்மாள்(62). இவரது வீட்டுக்குள் கடந்த 22-ம் தேதி மர்ம நபர் ஒருவர் புகுந்து, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றார். இதில் காயமடைந்த மாரியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மன்னார்குடி போலீஸார் விசாரித்து வந்தனர்.

விசாரணையில், மாரியம்மாளின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அங்கன்வாடி பணியாளர் ராணி(35), தனது ஆண் நண்பரான மன்னார்குடியைச் சேர்ந்த கார்த்தி(25) என்பவருடன் சேர்ந்து திட்டமிட்டு, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களின் திட்டப்படி மாரியம்மாளை அரிவாளால் வெட்டி, நகையை பறித்துச் சென்ற கார்த்தி, இதுதொடர்பாக தனது நண்பர் விக்னேஷ் என்பவரிடம் மதுபோதையில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை போலீஸாரிடம் விக்னேஷ் தெரிவித்ததைத் தொடர்ந்து, கார்த்தி, ராணி ஆகியோரை போலீஸார் கைது செய்து, மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு நேற்று ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்