போக்குவரத்துக்கு உகந்த வகை யில் இல்லாத மத்தளங்குடி- பில்லாளி சாலையை சீரமைத்து, புதிய சாலை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சி மத்தளங்குடி, அனவாசநல்லூர், பில்லாளி உள்ளிட்ட கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மத்தளங் குடி- பில்லாளி கிராமங்களை இணைக்கும் வகையில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக பில்லாளி வந்து, அங்கிருந்து திருவாரூர், நாகை, திருப்பயத்தாங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொது மக்கள் சென்று வந்தனர்.
அதேபோல, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட் களை உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வும், பள்ளி மாணவ, மாணவி கள் திருக்கண்ணபுரம் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு சென்றுவரவும் இந்த சாலையைத்தான் பயன் படுத்தி வருகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் கொண்ட சாலை 10 ஆண்டு களுக்கும் மேலாக சேதமடைந்து, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காணப் படுகிறது. இதனால், இந்தச் சாலையில் வாகனங்களை செலுத்த முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், இந்தச் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு உகந்த வகையில் இல்லாத மத்தளங்குடி- பில்லாளி இணைப் புச் சாலையை சீரமைத்து, புதிய சாலை அமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago