திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் - கும்பாபிஷேக விழா நடத்த 2022 ஜூலை 6-ம் தேதி உகந்த நாள் : தேவபிரசன்னத்தில் தகவல்

By செய்திப்பிரிவு

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்த 2022-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி உகந்த நாள் என்று தேவபிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான குமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷே கத்துக்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இக்கோயிலில் நடைபெற்றது. கோட்டயம் திருவல்லா ஜோதிர் வாசுதேவன் பட்டத்திரி தலைமையில் நடந் தேவபிரசன்னத்தில், திருவட்டாறு கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு வருகிற 2022-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ஏற்ற நாளாகும்.

கோயில் விக்ரகங்களுக்கு அதற்கான பூஜை முறைகளை ஒரு மாதம் முன்னதாகவே மேற்கொள்ளலாம். கோயில் சந்நிதியிலேயே பசு வளர்த்து அதிலிருந்து பெறப்படும பால் மூலம் மட்டுமே சுவாமிக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

கோயில் சுற்றுப்புறத்தில் பூங்கா அமைத்து அதிலிருந்து கிடைக்கும் பூக்கள் மூலம் சுவாமியை அலங்கரிக்க வேண்டும். ஐப்பசி, பங்குனி திருவிழாக்கள் எப்போதும் போல் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவிதாங்கூர் மன்னர் வாரிசு லெட்சுமிபாய் தம்புராட்டி மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கோயில் சுற்றுப்புறத்தில் பூங்கா அமைத்து அதிலிருந்து கிடைக்கும் பூக்கள் மூலம் சுவாமியை அலங்கரிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்