திருநெல்வேலி புரத்தில் - பீமா ஜுவல்லரி புதிய கிளை இன்று திறப்பு விழா :

திருநெல்வேலி புரத்தில் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டுள்ள பீமா ஜுவல்லரியின் புதிய கிளை திறப்பு விழா இன்று காலை 11-30 மணிக்கு நடைபெறுகிறது.

இங்கு திருமணம் மற்றும் நிச்சயதார்த்தத்துக்குரிய தங்கம், வைர நகைகள், தொன்மை வாய்ந்த நகைகள் மற்றும் புதிய தலைமுறையினர், இளைஞர்களுக்கான நகைகளை பலவித டிசைன்களில் வாங்கி மகிழலாம். ஏராளமான வெள்ளிப் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

திறப்பு விழா சலுகையாக நகைகள் வாங்கும் போது தங்கம் விலையில் கிராமுக்கு ரூ.100 தள்ளுபடி மற்றும் ஒரு தங்க நாணயமும், வைர நகைகளுக்கு காரட்டுக்கு ரூ.12 ஆயிரம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. வெள்ளிப் பொருட்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை. வாங்கும் ஒவ்வொரு நகைக்கும் இலவசப் பரிசும் வழங்கப்படுகிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் க்யூ ஆர் கோடு மூலம் ரூ.5,000 வரை தள்ளுபடி பெறுவதற்கான பரிசு சீட்டுகளை நுண்ணாய்வு செய்து வழங்க உள்ளனர்.

வாங்க இருக்கும் நகைகளுக்கு 1 சதவீதம் பணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம். தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் ஏற்பட்டாலும் நகைகளை வாங்கும் நாளன்று, முன்பதிவு செய்யும் போது உள்ள விலை அல்லது நடப்பு விலை இதில் எது குறைவோ அந்த விலைக்கு வாங்கலாம்.

பீமா ஜுவல்லரியின் தலைவர் டாக்டர் பி. கோவிந்தன், ‘பீமா என்றால் தூய்மை என்று பொருள். தூய்மையான தங்கம் இப்போது திருநெல்வேலியிலும் காலடி எடுத்து வைத்துள்ளது’’ என தெரிவிக் கிறார். 97 வருட பாரம்பரியம் மிக்க பீமா ஜுவல்லரியில் நகை வாங்கும் போது, திருநெல்வேலி மக்களுக்கு அது அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று அதன் நிர்வாக அதிகாரி சுதிர் கபூர் தெரிவிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE