பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு : வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில், பெட்ரோல், டீசல் விலை விலை ரூ.100-ஐ கடந்த நிலையிலும், தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வருவதைக் கண்டு வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை மிக அதிகபட்சமாக ரூ.102 வரை அதிகரித்து விற்பனையானது. இதற்கிடையே, தமிழக அரசு பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்ததால், ரூ.100-க்கும் கீழ் குறைந்தது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 7 மாவட்டங்களில் ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.104.22-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.25-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. அதன்படி, சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.104.52-க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 34 காசுகள் அதிகரித்து ரூ.100.59-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்