வேலூர் அரசினர் தொழிற்பயிற்சியில் - நேரடி சேர்க்கைக்கான : கால அவகாசம் நீட்டிப்பு :

By செய்திப்பிரிவு

வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக் கான கால அவகாசம் இம்மாதம் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற் பயிற்சி பெறுவதற்கான நேரடி சேர்க்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 30-ம் தேதி வரை மதிப்பெண் அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலியாக உள்ள ஓராண்டு தொழிற் பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 2 ஆண்டுகள் பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் தற்போது சேர்க்கை நடந்து வருகிறது. 14 வயது முதல் 40 வயதுள்ள இருபாலரும் தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கட்டணம் கிடையாது. பெண் களுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50-ஐ கிரெடிட், டெபிட், ஜிபே, நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

பயிற்சி வகுப்பில் சேரும் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். இது மட்டுமின்றி விலையில்லா பாடப்புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, வரைப்படக்கருவி, சீருடை அதற்கான தையற்கூலி, காலணி, கட்டணமில்லா பேருந்து பயண அட்டை உள்ளிட்ட அரசின் சலுகை கள் வழங்கப்படும். மேலும், விவரம் தேவைப்படுவோர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் துக்கு நேரில் சென்றோ அல்லது 0416-2290848 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்