பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளை தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலாளர் ரா.தெய்வராஜ் தொடங்கி வைத்தார். துணை பொதுச் செயலாளர்கள் முரளிதரன், மகாதேவன், செல்வக்குமார், அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மாவட்ட பொதுச்செயலாளர் தேவராஜ், சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளர் ரா.லெனின், மாநில சம்மேளன உதவித் தலைவர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பேட்டா, இன்சென்டிவ் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும். ஓய்வுபெற்றோருக்கு பணப்பலன், டிஏ உயர்வு, மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதேபோல், பொன்மேனி, எல்லீஸ் நகர், புதூர், சிப்காட், திருப்பரங்குன்றம், சோழவந்தன் உள்ளிட்ட 16 பணிமனைகளிலும் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago