பெரம்பலூர் மாவட்டம் எழுமூரில் தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டம் எழுமூரில் தூய்மை இந்தியா இயக்கம், கரோனா தடுப்பு தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, எழுமூர் ஊராட்சி மன்றத் தலைவர் ரகுபதி தலைமை வகித்தார்.

திருச்சி கள விளம்பர அலுவலர் தேவிபத்மநாபன் தனது நோக்கவுரையில், “தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் இதுவரை 10.71 கோடி தனிநபர் கழிப்பிடங்களும், நகர்ப்புறத்தில் 62 லட்சம் தனிநபர் கழிப்பிடங்களும் கட்டப்பட்டுள்ளன’’ என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சிறந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க துணிப் பைகள் விநியோகிக்கப்பட்டன. ஊட்டச்சத்து குறைபாடு தவிர்ப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், தூய்மை இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி, நேரு யுவகேந்திரா கணக்கர் தமிழரசன், மருத்துவ அலுவலர் நேரு, சமூக நலத் துறை அலுவலர் செந்தாமரை, ஒன் ஸ்டாப் மைய பொறுப்பாளர் கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்