திருச்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

By செய்திப்பிரிவு

திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் 6-வது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 629 இடங்களில் நேற்று நடைபெற்றது. திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தசைச்சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், 13 பேருக்கு விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 2 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், 2 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் என மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபுர் ரஹ்மான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், சமூக நல அலுவலர் தமீமுன்னிசா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்