கடலில் மூழ்கிய மாணவரை தேடும் பணி தீவிரம் :

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: ஈத்தாமொழி அருகே உள்ள காற்றாடித்தட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் மது(19). ஐடிஐ மாணவரான இவர் நேற்றுமுன்தினம் நண்பர்களுடன் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆயிரங்கால் பொழிமுகம் கடற்கரைக்கு சென்றார். கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது மதுவை கடல் அலை இழுத்துச் சென்றது. ராஜாக்கமங்கலம் போலீஸார் மற்றும் மீனவர்கள் இணைந்து கடலில் தேடினர். நேற்று 2-வது நாளாக தேடுதல் பணி நடைபெற்றது. ஆனால், மதுவை கண்டுபிடிக்க முடியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்