திருநெல்வேலி: திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் உலக உணவு தினத்தை முன்னிட்டு “கால்நடை மற்றும் கோழியின உற்பத்திப் பொருட்களை மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல்” என்ற தலைப்பில் மாநில அளவிலான இணையவழி கருத்தரங்கு நடத்தப்பட்டது.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரிகால்நடை பண்ணை வளாக பேராசிரியர் மற்றும் தலைவர் சூ.கி. எட்வின் தலைமை வகித்தார். கல்லூரியில் உள்ள வல்லுனர்கள் பால் மற்றும் இறைச்சிப் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் விற்பனை வாய்ப்புகள் பற்றி விளக்கவுரை ஆற்றினர்.
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த 80 மாணவர்கள், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து 100 விவசாயிகள், தொழில்முனைவோர், பிற கல்லூரி மாணவர்கள் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் பங்கேற்றனர். கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத் துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் மு. அண்ணா ஆனந்த் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago