திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கோ. சிவாஜி கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தற்போது தங்க பத்திர விற்பனை வரும் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தனிநபர் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோவரை வாங்கலாம். மேலும் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும்போது அன்றுள்ள விலைக்கு நிகராக பணமும் பெறலாம்.
வரும் 25-ம் தேதி முதல் 29-ம் தேதிவரை விற்பனை தொகை கிராமுக்கு ரூ.4,761 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பான் கார்டு, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லதுபாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும்ஒன்றின் நகல், தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின்முதல் பக்கத்தின் நகல் ஆகியவற்றை கொண்டு அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் விண்ணப்பித்து தங்க பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago