தூய சவேரியார் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி :

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டையில் தூய சவேரியார் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு ஐந்தாம் பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் லெப்டினன்ட் கர்னல் நிதிஷ் குமார் உத்தரவுப்படி, சுபேதார் மேஜர் ராஜேஷ் வழிகாட்டுதலில் ஒரு நாள் சமூக நலப்பணி முகாம் தூய சவேரியார் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

லெப்டினன்ட் எஸ். கந்தன் ஒருங்கிணைப்பில் 60 என்சிசி மாணவர்கள் பாளையங்கோட்டை பேருந்துநிலையம் அருகில் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். கல்லூரியில் இருந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வரை சாலையின் இருபுறமும் உள்ள குப்பைகளையும், கட்டபொம்மன் சிலை மற்றும் அதை சுற்றி அடர்ந்துள்ள செடி, கொடிகள்,பிளாஸ்டிக் கழிவு பொருட்களையும் அகற்றினர். 2 டன் அளவுக்கு பலவகையான குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்