வன விலங்குகள் நடமாட்டத்தால் : சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை :

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: வால்பாறையில் கனமழை மற்றும் யானைகள் நடமாட்டம் காரணமாக கூழாங்கல் ஆறு மற்றும் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கனமழை மற்றும் யானைகள் நடமாட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்லும் சிறுகுன்றா, கூழாங்கல் ஆறு மற்றும் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சிக்கு செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்தும் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது,‘‘ சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றுப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி பகுதியில் தற்போது யானைகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதேபோல சேடல் டேம், சோலையாறு அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி அணைப்பகுதியில் குளிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்