பொள்ளாச்சி: வெளிநாடுகளில் வசிக்கும் கல்லூரி மாணவ நண்பர்கள் இணைந்து பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஏழை மாணவர்களுக்கு கல்விக்கான நிதி உதவியை வழங்கினர்.
பொள்ளாச்சியை சேர்ந்த முன்னாள் கல்லூரி நண்பர்கள் பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தன்னார்வமாக இணைந்து ‘பொள்ளாச்சி பார்வேர்ட்’ என்ற பெயரில் அறக்கட்டளையை நிறுவி பொதுநலன் சார்ந்த உதவிகளை செய்து வருகின்றனர். அறக்கட்டளை சார்பில், குள்ளக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் 7 மாணவர்களுக்கு ரூபாய் 2.5 லட்சம் மதிப்பில் ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை ஏற்றுள்ளனர். மேலும் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு சிறப்பு கழிப்பறை வசதியும் செய்து கொடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago