கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சிஐடியு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. கிளைத் தலைவர் ஜான்லூயிஸ் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் உமர்பாரூக் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற நல அமைப்பின் மாவட்ட செயலாளர் குணசேகரன், மத்திய சங்க பொதுச் செயலாளர் முரளி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிளை பொருளாளர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பேட்டா, இன்சென்டிவ் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அகவிலைப்படி, ஊதிய உயர்வு நிலுவையை உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெற்றோர் பண பலன், டிஏ உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல், ஓசூரிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடந்தது. இன்று (23-ம் தேதி) தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் தொடர் முழக்க போராட்டம் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago