செஞ்சியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(41). இவர், அங்கு அடகு கடை வைப்பதற்கு அனுமதி கோரி வருவாய்த் துறையில் கடந்த 2015 -ம்ஆண்டு விண்ணப்பித்தார். அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து செஞ்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை உதவியாளரான வேலு (43) என்பவரிடம் சென்று ராஜேஷ்குமார் கேட்டுள்ளார். அடகு கடைக்கு அனுமதி வழங்கரூ.3,500 லஞ்சமாக தர வேண்டும் என்று வேலு கூறியதை கேட்ட ராஜேஷ்குமார், இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி, பணத்தை வேலுவிடம்ராஜேஷ்குமார் வழங்கினார். அப்போது, வேலுவை கைது செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று நீதிபதி கோபிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன், இவ்வழக்கில் வேலுவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago