புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி சுதந்திர பொன்விழா நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. இந்நிலையில் நேற்று ஒரு குட்டி நாய் உள்பட 7 தெரு நாய்கள் திடீரென வாந்தி எடுத்து, துடிதுடித்து இறந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கால்நடைத்துறை அதிகாரிகள் இறந்த நாய்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், சாரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்(எ) மொட்டை தோப்பு சுந்தர்(32) நாய்க்கு விஷம் வைத்து கொன்றது தெரிய வந்தது. சுந்தரின் உறவினர்களை நாய்கள் அடுத்தடுத்து கடித்ததால் கோபமுற்ற அவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago