புதுச்சேரியில் கட்டிடக்கலை தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக ரூ. 5 ஆயிரம் தரக்கோரி தொழிலாளர் நலத்துறை முன்பு ஏஐடியூசி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
போராட்டம் தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், "கட்டிடக்கலை தொழிலாளர் அனைவருக்கும் தீபாவளி உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அக்டோபர் மாதம் வரை பதிவு செய்தவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். வாரியத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தவர்களை உடனடியாக சேர்க்கை வேண்டும். புதிதாக வாரியத்தில் சேர விண்ணப்பம் வழங்க வேண்டும். காலதாமதமின்றி கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது." என்று குறிப்பிட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்டிடக்கலை தொழிலாளர் சங்க தலைவர் அய்யம்பெருமாள், பொதுச்செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஞானவேல் தலைமை வகித்தனர். மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக விவிபி நகரிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago