மத்திய அரசின் கையில் இருக்கிறது
‘மத்திய குழுவினர் ஆய்வுக்கு வந்துள்ள சூழலில், ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படுமா?’ என்று துறை அமைச்சர் சாய் சரவணக்குமாரிடம் கேட்டதற்கு, "ரேஷன் கடைகளை திறந்து பொருட்கள் தர உரிய நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மத்திய ஆய்வுக் குழுவிடமும் தெரிவித்துள்ளோம். மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் முதல்வருடன் ஆலோசித்து ரேஷன் கடைகளைத் திறப்போம். ரேஷனில் அரிசி, சர்க்கரை தொடங்கி அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் தரும் திட்டம் உள்ளது" என்று தெரிவித்தார். புதுவையில் கூட்டுறவுத் துறையின் கீழ் 317, பாப்ஸ்கோ 35, தனியார் 25 என மொத்தம் 377 ரேஷன் கடைகள் இயங்கி வந்தன.
இந்தக் கடைகள் மூலம் இலவச அரிசி, தீபாவளிக்கு சர்க்கரை, பொங்கல் பொருட்கள், பேரிடர் கால நிதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆட்சியில் ஆளுநர் -அமைச்சரவைக்கு இடையிலான மோதலின் போது, அப் போதைய ஆளுநர் கிரண்பேடி நடவடிக்கையால் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அரிசிக்கு பதில் பணம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரேஷன் கடைகள் மூடப்பட்டன.
42 மாதங்களாக தவிப்பு
இதனால் ரேஷன்கடை ஊழியர்கள் 42 மாதங்களாக ஊதியமின்றி உள்ளனர். இந்நிலையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுத்தது. மத்திய உணவுத் துறை அமைச்சகம், ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதிப்பதாக உறுதியளித்தது. ஊதியம் கிடைக்காததால் ரேஷன் கடை ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் மீண்டும் இறங்கி யுள்ளனர்.இந்நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அதிகாரி ராஜன் தலைமையில் மத்தியக் குழுவினர் நேற்று புதுவைக்கு வந்தனர்.
புதுவையில் செயல்படுத் தப்படும் நேரடி மானியம், பிரதமரின் ‘கரீப் கல்யாண்’ திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்படும் 5 கிலோ இலவச அரிசி திட்டம் குறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மத்திய அரசின், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை புதுவையில் அமல்படுத்துவது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.
காரைக்காலில் ஏழை மக்க ளுக்கு இலவச அரிசி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அரிசி வீணாகி விட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்தும் மத்திய அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போதுமத்தியக் குழுவிடம் புதுவை அதிகாரிகள் ரேஷன் கடைகள் மீண்டும் திறந்து அதன் மூலம் இலவச அரிசி, மளிகைப் பொருட்களை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago