மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிறந்தநாளையொட்டி ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"வளமான, வலிமையான பாரதத்தை உருவாக்க உறுதி கொண்டு, பிரதமரோடு தோளோடு தோள் நின்று தீராத காஷ்மீர் எல்லை பிரச்சினை முதல் கன்னியாகுமரி வரை அகண்ட பாரதத்தை அரசியல் சாணக்கியத்துடன் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முழு மூச்சுடன் ஈடுபடும் எங்களின் வழிகாட்டி, பாரத தாயின் நம்பிக்கை நட்சத்திரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளைப் பெற்று மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago