ராமநாதபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணி : அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கை மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். கே.நவாஸ்கனி எம்.பி., எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), செ.முருகேசன் (பரமக்குடி), ராம.கருமாணிக்கம் (திருவாடானை), ஆட்சியர் சங்கர் லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய நான் நியமிக்கப்பட்டுள்ளேன். அதன்படி நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடி னேன். குடிநீர், சாலை, பொது சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன்.

ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பகுதியில் அகழாய்வு பணி விரைவில் மேற் கொள்ளப்படும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE