வில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனியைச் சேர்ந்த 25 வயது பெண், நேதாஜி சாலையில் நகைக்கடை பஜாரில் நேற்று நடந்து வந்தபோது அவர் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீச முயன்றார். அப்போது அந்த பெண் இளைஞரின் கையைப் பிடித்ததால் ஆசிட் கீழே விழுந்தது. இதனால், ஆசிட் வீச்சில் இருந்து அந்த பெண் தப்பினார். ஆசிட் வீச முயன்ற நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
அப்பெண் வில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் ஆசிட் வீச முயன்றவர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த பிரபு (34) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago