நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கக்காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (23-ம் தேதி) 6-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பங்கேற்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தொழிலதிபர்கள், லாரி மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள், ஜவுளி, நகைக்கடை நிர்வாகத்தினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு பரிசுகளை வழங்க முன்வந்துள்ளனர். இதன்படி, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்கக்காசு, வெள்ளிக்காசு, பாத்திரங்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படவுள்ளன. 18 வயது நிரம்பிய அனைவரும் முகாமில் பங்கேற்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago