கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோடை அருகே சரக்கு வாகன ஓட்டுநரை கொலை செய்த மனைவி உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த உனிச்செட்டியைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் அய்யப்பன் (37). இவரது மனைவி ரூபா (25). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் ரூபாவிற்கும் ஜவளகிரி அடுத்த மஞ்சகிரியைச் சேர்ந்த தங்கமணி (20) என்பவருக்கும் இடையே தவறான பழக்கம் இருந்தது. இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூபா வீட்டைவிட்டு வெளியே சென்றார். அவரை 10 நாட்களுக்கு முன்னர் உறவினர்கள் அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மதுபோதையில் இருந்து அய்யப்பன் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அய்யப்பன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை போலீஸார் நடத்திய விசாரணையில், தங்கமணி கூறியபடி ரூபா தனது கணவரின் கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரிந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் ரூபா, தங்கமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago