மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

சேலம்: தமிழகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து, காவிரியில் திறக்கப்பட்டுள்ள நீர் காரணமாக, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 10 ஆயிரத்து 559 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று காலை விநாடிக்கு 13 ஆயிரத்து 477 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, நேற்று மாலையில் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

இதனிடையே, மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 94.20 அடியாக இருந்தது. இது நேற்று 95.10 அடியாக அதிகரித்தது. அணையின் நீர் இருப்பு 57.58 டி.எம்.சியில் இருந்து, 58.67 டி.எம்.சி ஆக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 500 கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 550 கனஅடி வீதமும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்