அதிமுக கூட்டணியில் ஒருவர் மாற்றி வாக்களித்ததால் - நாமக்கல் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றியது திமுக :

By செய்திப்பிரிவு

அதிமுக கூட்டணியில் ஒரு உறுப்பினர் கட்சி மாறி வாக்களித்த

தால், நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

நாமக்கல் மாவட்ட ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும் இருந்த, முன்னாள் எம்.பி. சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுகவைச் சேர்ந்த துரைசாமி வெற்றிபெற்றார்.

இதையடுத்து மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ரகசிய வாக்குப்பதிவில் திமுக உறுப்பினர் செந்தில்குமார் 9 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக உறுப்பினர் செந்தில் 8 வாக்குகள் பெற்றார். தற்போது மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சாரதா செயல்பட்டு வருகிறார்.

அதிமுகவில் 8 உறுப்பினர் மற்றும் பாமகவில் ஒரு உறுப்பினர் என அதிமுக அணியில் 9 உறுப்பினர் கள் உள்ள நிலையில், ஒரு உறுப்பினர் கட்சி மாறி திமுகவிற்கு வாக்களித்ததால், துணைத்தலைவர் பதவி அக்கட்சிக்கு சென்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்