சேலத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் சோதனை :

By செய்திப்பிரிவு

சேலம்: முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உட்பட 50 இடங்களில் கடந்த 18-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை நந்தனத்தில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் வீடு, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், அண்ணாநகர் மேற்கில் உள்ள மற்றொரு உதவியாளரான முருகன் வீடு மற்றும் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மற்றொருநண்பரான மருத்துவர் செல்வராஜா வீடு ஆகிய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

கடந்த 18-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையின்போது விஜயபாஸ்கர் தொடர்புடைய சில அலுவலகம் மற்றும் வீடுகள் பூட்டப்பட்டிருந்ததால் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை பெற்று அந்த இடங்களில் பூட்டை உடைத்து சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்