சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுபோல் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு 15.11.2021 வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 30.11.2021 வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதள த்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCTV குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 8344280895 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்