தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. தொழிலாளர் நல ஆணைய முதன்மைச் செய லாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அதுல் ஆனந்த் தலைமை வகித்தார். ஆட்சியர் திவ்யதர்சினி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தருமபுரி மாவட்டத்தில் மழைக் காலங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்களை கண்டறிந்து போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
எதிர்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ள பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யவும், இழப்புகளை தடுக்கவும், மழைக் காலத்தை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டம் தயாரித்து அதன்படி செயல்பட தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
மழைக்கால பேரிடர் முன்னதாக பழுதான மின்சார மின்கம்பங்கள், மின்சார கம்பிகள், சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்சார சாதனப் பொருட்களை ஆய்வு செய்து, உடனடியாக சரி செய்ய வேண்டும்.
மின்சாரம் இல்லாத நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குவதற்கு தேவையான வசதிகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் டிஆர்ஓ அனிதா, துணை ஆட்சியர் சித்ராவிஜயன், துணை ஆட்சியர் பயிற்சி கவுரவ்குமார் உள்ளிட்ட அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago