நாமக்கல்: திருச்செங்கோடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட பொதுச் செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. சம்மேளன நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago