உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் புதுச்சேரி காங்கிரஸ் : தகுதியான வேட்பாளர்களை கண்டறிய குழு அமைப்பு

By செய்திப்பிரிவு

புதுவை உள்ளாட்சித் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகத் தொடங்கி, தகுதியான வேட்பா ளர்களை கண்டறிய குழு அமைத் துள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்த லில் ஆளும் கட்சியிலிருந்த காங் கிரஸ் இரு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ் தைக் கூட பெற முடியாமல் கடும்சரிவை சந்தித்தது. காங்கிரஸி லிருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வெளியேறியதா லும், அவர்களை தொடர்ந்து நிர்வாகிகள் பலரும் சென்றதாலும் பெரும்பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸை வலுப்படுத்தும் முயற் சியில் அகில இந்திய தலைமை நேரடியாக ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் அகில இந்திய காங் கிரஸ் ஒரு குழுவை புதுவைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகளை சந் தித்து பேசினர். பெரும்பாலான நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில்காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். தொகுதி, மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகின்றனர்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தகுதியான, மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களை போட்டியிடச் செய்ய தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளால் குழு அமைக்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்திய நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகளில் வேட்பாளர்களை தேர்வு செய்ய7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்த குழுவில் புதுவை நகராட்சிக்கு ஜேம்ஸ், உழவர்கரை ரமேஷ், வில்லியனூர், மண் ணாடிப்பட்டு கொம்யூனுக்கு மகாத்மா சீனிவாசன், அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக் கம் கொம்யூனுக்கு பாலசுப்பிரமணி யன், காரைக்கால் நகராட்சி 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு காமராஜ், மாகே நகராட்சிக்கு பின்னி, ஏனாம் நகராட்சிக்கு உஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவின் முதல் கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் அகில இந்திய தலை மையால் நியமிக்கப்பட்ட குழு வினரை அறிமுகப்படுத்தினார். அவர்களின் மூலம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் புதுவையில் தங்கி உள்ளாட்சித் தேர்தல் பணிகளையும், வேட்பாளர்கள் தேர்வையும் தீவிரப்படுத் தியுள்ளனர்.

இதுதொடர்பாக மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறு கையில், “நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை செய்ய அறிவுறுத்தியுள்ளது. அகில இந்திய கமிட்டி நேரடி யாக நிர்வாகிகளையும் நியமித்துள்ளனர். தகுதியான வேட்பா ளர்களை இந்த குழுவினர் தேர்வு செய்வார்கள்” என்று குறிப் பிட்டார்.

காங்கிரஸை வலுப்படுத்தும் முயற்சியில் அகில இந்திய தலைமை நேரடியாக ஈடுபட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்