கடலூர் மாவட்டத்தில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் நோயாளிகள் வரும் நிலையில் அதில் 150 பேர் பல்வேறு வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிய முடிகிறது. நேற்று முன்தினம் 50 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்நோயா ளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு நேற்று ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில், 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. பாதிக்கப்பட்ட பண்ருட்டியைச் சேர்ந்த9 வயது சிறுவன், தோட்டப் பட்டைச் சேர்ந்த 48 வயது பெண், பண்ருட்டியைச் சேர்ந்த25 வயது இளைஞர், நெல்லிக் குப்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, காரைக்காட்டைச் சேர்ந்த28 வயது இளைஞர் என 5 பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சையை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தா சலம், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ளஅனைத்து அரசு மருத்துவமனை களில் அதிக அளவில் காய்ச்சல் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இந்த காலக்கட்டத்தில் காய்ச்சல் வராமல் தடுக்க சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கொசுக்கள் மூலமாக காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதால், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் சுய மருந்து எடுத்துக் கொள் ளாமல் மருத்துவர்களின் ஆலோ சனையை பெற்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். வீட்டைச் சுற்றி தண் ணீர் தேங்கி நிற்க விடக்கூடாது என்று சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த காலக்கட்டத்தில் காய்ச்சல் வராமல் தடுக்க சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்