நெய்வேலி வட்டம் 29-ல் புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளி முன்பு நிலுவையில் உள்ள 9 மாதங்கள் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். 2017-ம் ஆண்டில் இருந்து திருத்தம் செய்யப்பட்ட ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை பணி உயர்வு தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பள்ளியில் பணியாற்றும் 35-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பள்ளி ஆசிரியர்களிடம் வடலூர் கல்வி அலுவலர் சுந்தரேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனாலும் உண் ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago