ஏரி, குளங்களுக்கு மழைநீரை கொண்டு செல்லும் நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேற்று பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு சென்று தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தியை சந் தித்து பேசினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ளது. ஆனால் பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதகதியில் மேற் கொள்ளாமல் இருந்து வருகிறது. இதனால் புதுச்சேரியில் பல இடங் களில் மழைநீர் சாலைகளில் கழிவு நீருடன் சேர்ந்து நிற்கிறது. மழைநீரை ஏரி, ஆறுகளுக்கு கொண்டு செல் லும் நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் மழையின் போது நகரில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்குஉடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத் தினேன்.
வில்லியனூரில் ஆயுஷ் மருத்துவமனை கட்டுமானப்பணி பாதியி லேயே நிற்கிறது.
இதனால் அம்மருத் துவமனை மூலம் மக்களால் பலன் பெற முடியவில்லை. எனவே அதன் கட்டு மானப்பணியையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
தேவையான இடங்களில் ஆழ் குழாய்கள் அமைக்கவும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டேன். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்ததாக குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago