புதுச்சேரி துத்திப்பட்டில் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதா னங்கள் மூடப்பட்டபோது, முத்திரையர்பாளையத்தில் உள்ள இளங்கோவடி கள் அரசுப் பள்ளி மைதானத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து அச்சிறுமி புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் செய்தார்.
அவர்கள் விசாரணை நடத்திய நிலையில் இதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நலக்குழுவின் தலைவர் சிவசாமி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரன், அவரது மகனான கிரிக்கெட் வீரர் ரோஹித், இணை செயலாளர் வெங்கட் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமைறைவாக உள்ள 5 பேரையும் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் சம்பந்தி ஆவார். கிரிக்கெட் வீரர் ரோஹித் மருமகன் ஆவார். இவருக்கு சமீபத்தில் திரு மணம் நடந்தது.
இதற்கிடையே புகார் அளித்த சிறுமியிடம் மேட்டுப்பாளையம் போலீ ஸார் நேற்று விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago