ஈரோடு: சுகாதாரம், குடிநீர் வழங்கும் பணிகளை தனியாரிடம் வழங்கக் கூடாது, தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது, உள்ளாட்சி தொழிலாளர்கள் மீது வேலைப்பளுவை சுமத்தக் கூடாது, சுய உதவிக்குழு ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஏஐடியுசி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்ட ஏஐடியுசி தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் எம்பி சுப்பராயன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பும் ஏஐடியுசி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago