நாமக்கல்: குமாரபாளையம் நகராட்சியில் டெங்கு, மலேரியா நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என நகராட்சி ஆணையர் ஸ்டாலின்பாபு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தினமும் மழை பெய்து வருவதால் டெங்கு, மலேரியா போன்ற நோய் தோற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமாரபாளையம் நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு, வீடாகச் சென்று நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெப்பமானி கொண்டு காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதனையும் செய்யப்படுகிறது. கரோனா தொற்று வராமல் பாதுகாக்கவும், முகக்கவசங்கள், கிருமிநாசினி பயன்படுத்தவும், தடுப்பூசி போடவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நீர் தேங்கியுள்ள பாத்திரங்கள், உடைந்த மண் பானைகள், வாகன டயர்கள் ஆகியவை டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago