காவல் உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு :

விழுப்புரம் மாவட்டம் சோழியனூரைச் சேர்ந்தவர் பிரசன்னா(26). காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் தொழில்நுட்பப் பிரிவுஉதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.

சென்னையில் தங்கியிருந்த இவர், இரவுப் பணிக்காக நேற்றுமுன்தினம் மாலை டிஜிபி அலுவலகத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

காமராஜர் சாலையில் சென்றபோது, சாலையைக் கடக்க முயன்றபிரசன்னா மீது அவ்வழியே வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரசன்னா மீது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றும் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த அண்ணா சதுக்கம் போலீஸார் பிரசன்னாவின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்கள் வடபழனி ராஜ்குமார்(41), வியாசர்பாடி கார்த்திக் (41) ஆகியோரைப் பிடித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

முதல்வர் நிவாரணம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ஆழந்தஇரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE