1,500 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயற்சி : மங்களூர் அருகே இருவர் கைது

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் மங்களூர் பகுதியில் இருந்து சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று வேப்பூர் தாலுகா சிறுபாக்கம் சோதனைச் சாவடி அருகில் கடலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளாக ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. போலீஸார் மினி லாரியில் இருந்த 2 பேரிடம் விசாரணை செய்ததில் அவர்கள் மங்களூரைச் சேர்ந்த ஜெயக்குமார்(39), வேப்பூர் வட்டம் பொயனப்படியைச் சேர்ந்த மணி(42) என்றும் இவர்கள் வேப்பூர், மங்களூர் பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கோழித் தீவனத்துக்காக சேலம் மாவட்ட தலைவாசல் பகுதிக்கு எடுத்து சென்று விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் மினிலாரி, 1,500 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்