பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் : தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் 2 வது மாநில தேர்தல் மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் செல்லையா ,பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், பொருளாளர் தங்கவேலு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கட்டாய இடமாறுதல் திட்டத்தை பள்ளி கல்வித்துறை கைவிட்டு, வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.

2004 முதல் 2006 வரையிலான தொகுப்பூதிய பணிக்காலத்தை காலமுறை பணிக்காலமாக கணக்கில் கொண்டு, பதவி உயர்வு மற்றும் தேர்வு நிலையை அனுமதிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE