மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க வேண்டும் : தென்னக ரயில்வே பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க வேண்டும் என தென்னக ரயில்வே பயணிகள் சங்கப் பொதுச் செயலாளர் கே.பத்மநாதன் வலியுறுத்தி உள்ளார்.

ரயில்வே அமைச்சகம், தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு அவர் எழுதிய கடிதம்:

ரயிலில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. 60 வயது ஆண்களுக்கு 40 சதவீதம், 50 வயது பெண்களுக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகை கடந்த 20 ஆண்டுகளாக வழங்கியது.தற்போது மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்குவதால் ரூ.1,100 கோடி நிதி நெருக்கடி ஏற்படுகிறது. ஒரு பயணியால் 57 சதவீதம் மட்டுமே ரயில்வேக்கு வருவாய் கிடைப்பதால் மூத்த குடிமக்கள் சலுகைகளை விட்டுக் கொடுக்க நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 23-க்கு பிறகு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து மூத்த குடிமக்களுக்கு வழங்கிய சலுகைகள் நிறுத்தப்பட்டன. தற்போது அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

தற்போது எக்ஸ்பிரஸ், சிறப்பு ரயில்கள் கூடுதல் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. ரயில்வேக்கு சரக்கு, பயணிகள் ரயில்கள் மூலம் வருமானம் அதிகரித்து வருகிறது. எனவே மூத்த குடி மக்களுக்கு மீண்டும் சலுகை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்