சிவகங்கை மாவட்டம், திருப் பத்தூர் அருகே நாய்கள் கடித் ததில் 2 வயது ஆண் புள்ளிமான் உயிரிழந்தது.
திருப்பத்துார் வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் உள் ளன. நேற்று மணமேல்பட்டியில் புகுந்த 2 வயது ஆண் புள்ளிமானை நாய்கள் விரட்டிக் கடித்தன. இதில் மான் உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டனர். பிறகு கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் பிரேதப் பரிசோதனை செய்தார். தொடர்ந்து திருப்பத்தூர் வனத் துறை அலுவலக வளாகத்தில் மான் அடக்கம் செய்யப்பட்டது.
அடிக்கடி குடியிருப்பு பகுதி களுக்குள் நுழையும் மான்கள் நாய்களால் கடிபட்டு இறக்கின்றன. சில சமயங்களில் விபத்துகளிலும் இறக்கின்றன. வனத்துறையினர் இதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago