சேலம் கிச்சிப்பாளையத்தில் - சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மறியல் :

By செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 43-வது கோட்டத்துக்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 43-வது கோட்டத்தில் கிச்சிப்பாளையத்தில் இருந்து எருமாபாளையம் செல்லும் பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணி கடந்த இரு ஆண்டுக்கு முன்னர் தொடங்கியது.

இதற்காக குழாய் பதிக்க சாலை முழுவதும் குழி தோண்டப்பட்டது. மேலும், பாதாள சாக்கடை தொட்டிகள் கட்டி, குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பணிகள் நடக்கும் பகுதியில் சாலையில் தோண்டப்பட்ட குழியால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழை நேரங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி வருகிறது.

எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாநகராட்சி 43-வது கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கிச்சிப்பாளையம்-எருமாபாளையம் செல்லும் பிரதானச் சாலையில் திரண்டு பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் வாகனத்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்