அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் குலமாணிக்கம், திருமழபாடி உள்ளிட்ட கிராமங்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, விவசாயிகள் கொண்டுவரும் நெல்களை விரைந்து கொள்முதல் செய்யவும், மழையில் நெல் நனையாமல் சேமிப்பு கிடங்குகளுக்கு உடனடியாக அனுப்பிவைக்கவும் கொள்முதல் நிலைய பணியாளர்களிடம் அறிவுறுத்தினார். அப்போது, நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டகை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago