கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த ரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா அண்மையில் திறக்கப்பட்டது. எனினும், அதற்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் வந்து சென்றனர்.
இந்த சூழலில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, மிலாது நபி உள்ளிட்ட பண்டிகை கால விடுமுறை தினங்கள் வந்ததால், கடந்த 4 நாட்களாக குழந்தைகள், பெரியவர்கள் என பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதற்குப் பின் தினமும் சுமார் 200 பார்வையாளர்கள் மட்டுமே வந்து சென்றனர்.
தற்போது பண்டிகை கால விடுமுறை என்பதால் கடந்த 14-ம் தேதி 405 பேர், 15-ம் தேதி 549 பேர், 16-ம் தேதி 707 பேர், 17-ம் தேதி 1,286 பேர் என படிப்படியாக அதிகரித்து வருகிறது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago