தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ :

By செய்திப்பிரிவு

வேலூர் பஜாரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

வேலூர் கிருபானந்த வாரியார் சாலை மற்றும் சுண்ணாம்புக்கார தெரு, ரொட்டிக்கார தெருக்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருப்ப தாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாநகராட்சி இரண்டாவது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் வேலூர் கிருபானந்த வாரியார் சாலை, சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 500 கிலோ அளவுக்கு பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைக்கு ‘சீல்’ வைத்தனர். பஜார் பகுதியில் வரும் நாட்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்