உதகை ராஜ்பவனில் நடைபெற்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சி களை ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டுகளித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு 5 நாள் பயணமாக கடந்த 15-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். உதகை ராஜ்பவனில் தங்கிய அவர், நேற்று பழங்குடியினரை சந்தித்து கலந்துரையாடினார்.
பரதநாட்டியம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியி னரான தோடர், கோத்தர், படுகரின மக்களின் பாரம்பரிய பாடல்கள், நடனங்களை அரங்கேற்றினர். கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த ஆளுநர், அவர்களை பாராட்டினார்.
நிகழ்ச்சியில், ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை உதகையிலிருந்து புறப் பட்டு, சென்னை திரும்புகிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago