கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் பாவக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு (65). நேற்று இவர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
அம்மனுவில் கூறியிருப் பதாவது:
சின்னகவுண்டனூர் கிராமத்தில் உள்ள புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து ஆதரவற்ற நிலையில் நான் வசித்து வருகிறேன். எனக்கு 5 வயதிலேயே கண்பார்வை பறிபோய்விட்டது. அதன்பின், வாழ வழியின்றி பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தேன். அவ்வாறு பிச்சை எடுத்த பணம் ரூ. 65 ஆயிரத்தை என்னிடம் வைத்திருந்தேன். எனக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், நான் பணம் எங்கு வைத்தேன் என்பதை மறந்து விட்டேன். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் வைத்திருந்த பணத்தை மீட்டேன். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட விவரம் எனக்கு தெரியவில்லை. ஏற்கெனவே ஆதரவு இல்லாமல் வாழ்ந்து வரும் எனக்கு நான் சேமித்து வைத்த பணம் உதவும் என்கிற நம்பிக்கை இருந்தது. தற்போது செய்வது அறியாமல் உள்ளேன். எனவே, ரூ.65 ஆயிரம் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை பெற்றுக் கொண்டு, தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய்கள் வழங்க உதவி செய்யு மாறு கேட்டுக் கொள் கிறேன்.
மனுவை பெற்ற அலுவலர்கள், முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் குறித்து, வங்கி மேலாளர் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago